சொல்லியபடியே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் 'அம்மா'.. பட்ஜெட் உரை நடுவே ஓ.பி.எஸ் புகழாரம்
சென்னை: 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்.
முதலில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக, முதல்வர் ஜெயலலிதா பற்றி கவிதை வடிவில் புகழுரை வடித்தார் பன்னீர்செல்வம்.
இதன்பிறகு பட்ஜெட் உரையை படித்தார் ஓ.பி.எஸ். ஆனால் நடுவே சில நிமிடங்கள் முதல்வர் பற்றி புகழ தயங்கவில்லை அவர்.

அப்படி ஓ.பி.எஸ். நடுவே உதிர்த்த வார்த்தைகள் இதோ: திருவள்ளுவர் கூறியதை போலவே, சொல்லியதை சொல்லியபடி செய்பவர் அம்மா. சட்டசபை தேர்தலில் அம்மாவுக்கு மகத்தான ஆதரவு அளித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியளிக்க வாய்ப்பு தந்தனர் தமிழக மக்கள். அந்த தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று அம்மா கூறினார்.
எனது நன்றிக்கடனை செயல் மூலம் காட்டுவேன் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவேன் என்றும், தேர்தல் வெற்றி செய்தி வந்ததுமே, அம்மா தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் பொருட்டு, 5 முக்கிய அரசாணைகளை வெளியிட்டு, தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications