பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்: ஜெ. சேமிப்பு நாள் வாழ்த்து
சென்னை: சிறுசேமிப்பு அவசர காலங்களில் உதவும் என்பதை கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை கொண்டுவரும் நோக்கில் ஆண்டுதோறும் அக். 30-ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சிக்கன நாளையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் அனைவரும் "சிறுகக் கட்டி பெருகவாழ்" என்பதை உணர்ந்து வாழ்வு வளம் பெற அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கு தொடங்கி சேமிக்க வேண்டும்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்பதனால் இத்தகைய சிறுசேமிப்பு அவசர காலங்களில் உதவும் என்பதை கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications