டெல்லியில் மோடி தலைமையில் மாநில கவுன்சில் கூட்டம்... ஜெ.பங்கேற்க விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும்.

எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வமோ அல்லது அரசு சார்பாக ஒரு நபரையோ அனுப்பாமல், முதல்வரே நேரடியாக கலந்து கொண்டு மாநிலங்களுக்கு இடையேயான உறவு, பொருளாதார திட்டங்கள், பள்ளி கல்வி விவகாரம், நேரடி மானிய திட்டம், தமிழ்நாட்டின் பாதுகாப்பு, தமிழ் மொழிக்கு முக்கிய அங்கீகாரம், கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை போன்ற பல முக்கிய அம்சங்களை தமிழக மக்களுக்காக எடுத்துரைத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, இந்த ஆலோசனை கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை தனியாக டெல்லியில் சந்தித்த ஜெயலலிதா, தமிழக பிரச்சனைக்காக சந்தித்தார் என்று தொலைக்கட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வந்த போது, அவர் தன் சொந்த பிரச்சனைக்காகவே பிரதமரை சந்தித்தார் என்று அரசியல் ஆர்வலர்களும் கூறுகிறார்கள். தன் சொந்த பிரச்சனைக்காக ஜெயலலிதா, மோடி அவர்களை சந்தித்தது ஒரு புறம் இருக்க, தமிழகத்திற்காக இந்த ஆலோசனை கூட்டத்தை ஜெயலலிதா அவர்களே நேரடியாக கலந்து கொண்டு, தமிழகத்திற்கு நன்மை பயத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications