ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்து முழுவதுமான விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு சரிவர தெரிவிக்கப்பட வில்லை.

இதனையடுத்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், அவர் குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, முதல்வரின் உடல் நிலை குறித்த பிரச்சனை பொதுமக்களிடையே பேசும் பொருளாக மாறி இருப்பதால் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும், மருத்துவமனை அளிக்கும் விளக்கத்தைக் காட்டிலும், தமிழக அரசு சார்பிலான விளக்கத்தை இன்று நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications