For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.2 கோடி மதிப்பிலான விருந்தினர் மாளிகைகளை திறந்து வைத்த ஜெயலலிதா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள அரசு விருந்தினர் மாளிகைகளை முதல்வர்ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி அரசு விருந்தினர் மாளிகையில் 7555 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதனவசதியுடன் கூடிய 5 அறைகள் கொண்ட முதல் தளம், மேலும், விருந்தினர் மாளிகைக்கான மழை நீர்சேகரிப்பு வசதி, நடைபாதை, புல்வெளி உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் 1 கோடியே 30 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட விருந்தினர் மாளிகை கட்டிடம்,

Jayalalitha inaugurates new guest houses

ஈரோட்டிலுள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் 3982 சதுர அடி பரப்பளவில் 6குளிர்சாதன அறைகள், மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை மற்றும் புல்வெளி உள்ளிட்டவசதிகளுடன் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய விருந்தினர்மாளிகை என 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விருந்தினர் மாளிகைக் கட்டிடங்களைமுதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தரை தளத்துடன் கூடிய இரண்டுதளங்களாக 60364 சதுர அடி கட்டிடத்திற்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டி அதன் மாதிரிவடிவமைப்பை பார்வையிட்டார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Jayalalitha's press release on construction of new GuestHouses by the State Public Works Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X