அமாவாசைக்கு அப்புறம் ஏப். 11ல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்.. "அம்மா" திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இம்மாதம் 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 29 ம் தேதி செவ்வாய் கிழமை ரிலீஸ் ஆகும் என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் நேர்காணல், கூட்டணி கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு ஆகியவைகளை முடித்து விட்டு வளர்பிறை நாளான ஏப்ரல் 11ம் தேதி ஜெயலலிதா வேட்பாளரை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்க இன்னும் 26 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சிகள் அவசரமே இல்லாமல் கொஞ்சம் மெதுவாகவே செயல்பட்டு வருகின்றன.

தமிழக தேர்தல் களத்தில் அதிமுக கட்சிதான் முதலில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பிரசாரம் என அனைத்திலும் முன்னணியில் இருக்கும். இம்முறை அதிமுக முகாமும் சற்றே பொறுமை காக்கிறது. அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை.

வேட்பாளர் நேர்காணல்

வேட்பாளர் நேர்காணல்

வேட்பாளர்களுக்கான நேர்காணல் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனால் எப்படியும் ஏப்ரல் முதல் வாரம்தான் அதிமுகவில் ஒரு தெளிவான முடிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

அதிமுகவில் நடைபெறும் நேர்காணலில் புதுமுகங்களும், பெண்களும் அதிக அளவில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சிட்டிங் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இதனால் தங்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அமாவாசை நாளில்

அமாவாசை நாளில்

ஏப்ரல் மாதம் 7ம்தேதி முழு அமாவாசை தினமாகும். அன்று சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளது.7ம்தேதிக்கு பிறகு வளர்பிறையில் வேட்பாளர் பட்டியலை வெளியிடலாம் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுபமுகூர்த்த நாளில்

சுபமுகூர்த்த நாளில்

வளர்பிறை தொடங்கிய பிறகு 11ந்தேதி முதல் சுபமுகூர்த்த தினம் வருகிறது. அந்த தேதியின் கூட்டுத் தொகை 2 ஆக உள்ளது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு உகந்த ராசியான எண் ஆக கருதப்படுகிறது. எனவே ஏப்ரல் 11ம்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

அமாவாசை தினமாக ஏப்ரல் 7ம் தேதி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதால் அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கிய ரகசியத்தை கசியவிட்டது யார் என்றும் உளவுத்துறை மூலம் விசாரணை மேற்கொண்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+