ஜெயலலிதா பிறந்த மைசூரு வீடு இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

ஜெயலலிதா பிறந்த மைசூரு வீட்டில் தற்போது தனியார் கிளப் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் தாயாருக்கு சொந்தமான மைசூரு வீடு பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் முன்னோர்கள் வாழ்ந்த பரம்பரை வீடு ற்போது மது விற்பனை நடைபெறும் கிளப் ஆக செயல்படுகிறதாம்.

Jayalalitha Mysore bungalow story

மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது தந்தையார் ஜெயராம், தந்தை வழி பாட்டனார் மைசூர் மகாராஜாவிடம் டாக்டராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. மைசூரு மகாராஜா ஜெயசந்திரமகேந்திர உடையார் மீது கொண்ட அன்பினாலேயே தனது மகனுக்கு ஜெயராம் என்று பெயர் சூட்டினாராம்.

ஜெயலலிதாவிற்கு முதலில் அவரது பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்று வைத்தனர். அதன் பின்னரே ஜெயலலிதா என்று பெயர் மாறியது.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தனது குழந்தைகளுடன் லட்சுமி வசித்த போது ஜெய விலாஸ், லலிதா விலாஸ் ஆகிய வீடுகள் இருந்ததாக தெரிகிறது. கணவர் ஜெயராமின் மறைவுக்குப் பின்னர் பெங்களூருவிற்கு இடம் பெயர்ந்த போது லட்சுமிபுரத்தில் இருந்த வீடுகளை விற்று விட்டாராம். அந்த வீடுதான் இப்போது சொர்ண விலாஸ் ஆக மாறியுள்ளது. இங்கு தனியார் கிளப் நடைபெறுகிறதாம். மது விற்பனை கூடமும் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+