உடல்நிலை பிரச்சினை: அப்துல் கலாம் இறுதிச்சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை
சென்னை: உடல்நிலை கோளாறு காரணமாக மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என செய்திகள் வெளியானது.
இதனை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் தன்னால் பங்கேற்க இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்துசக்தியாக விளங்கியவர் அப்துல் கலாம். இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என வாழ்ந்தவர். கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தவே எனக்கு விருப்பம். உடல்நிலை காரணமாக தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை. அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு.
அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் எனது சார்பில், அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்பர். அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தரராஜ், உதயகுமார் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications