அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் ஜெயலலிதா தான்: செல்லூருக்கு ஜெயக்குமார் பதிலடி
அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் ஜெயலலிதா தான் என அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் ஜெயலலிதா தான் என அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் சசிகலாதான் என தெரிவித்தார். எடப்பாடி அணிக்குள் தங்களின் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக டிடிவி தினகரன் கூறிவந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சு ஆட்சியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சியமைய சசிகலா உதவி புரிந்தார் என என்னுடைய மனசாட்சியின் படியே கூறினேன் என மீண்டும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் ஜெயலலிதா தான் என்று அவர் கூறினார். உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தங்களுக்காக ஓட்டுக்கேட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்தவர் அவர் தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.


Click it and Unblock the Notifications
