புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்த நமது எம்.ஜி.ஆர் இணையதளம்... ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை: புதிய பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரின் இணையதளத்தை www.drnamadhumgr.com முதல்வர் ஜெயலலிதா இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையதள சேவையை தொடங்கிவைத்தார். www.drnamadhumgr.com என்ற முகவரியில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் அனைத்து செய்திகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், நமது எம்.ஜி.ஆர் இணையதளத்தில், தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், வரும் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதற்கு திமுக கூட்டணிக்கு அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், நமது எம்.ஜி.ஆர்.இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக கூறி கடந்த சில மாதங்களாகவே அந்த இணையதளம் புதுப்பிக்கப் படாமேலேயே இருந்தது.
இந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையதளம் புதுப்பொலிவுடன், பல்வேறு புதிய தகவல்களுடன் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்று நமது எம்.ஜி.ஆர். இணையதளத்தை www.drnamadhumgr.com தொடங்கி வைத்தார்.
புதுப்பிக்கப்பட்டுள்ள நமது எம்.ஜி.ஆர். இணையதளத்தில் அதிமுக தொண்டர்களும், இணையவாசிகளும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் தெளிவாக அறிந்துக் கொள்ளும் வகையில், இணையதள பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த இணையதளத்தில், தலைப்புச் செய்திகள், முக்கியச் செய்திகள் மட்டுமல்லாது, அ.இ.அ.தி.மு.க. அறிக்கைகள், ஜெயலலிதாவின் முக்கிய அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவை புதிய வடிவில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பஞ்ச் கார்னர், அறிவோம் அறிவியல், ஜோதிடம், விளையாட்டு, சித்திர குப்தன், வாழ்த்துகள், வீடியோ, புகைப்படம், இ.பேப்பர் ஆகியவற்றுக்கு நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் புதிய இணையதளத்தில் தனித்தனி லிங்க்குகள் அளிக்கப்பட்டு, அவற்றை அனைவரும் எளிதில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications