ஜெயம், விஜயம், பெருமாள், முருகன், சிவன், சூரியன்... அடடே அதிமுக வேட்பாளர் பட்டியல்
சென்னை: அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில் ஜெயலலிதா, விஜயகுமார் என வெற்றியினை குறிக்கும் பெயர்களைத் தவிர பெருமாள், முருகன், சிவன், சூரியன், உமாமகேஸ்வரி என சாமிகள் பெயர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
இதெல்லாம் பார்த்து பார்த்து தேர்வு செய்தார்களா? தானாக அமைந்ததா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. ஏதோ கோவிலுக்குள்ள போய் சாமி பேர்களை அட்டெண்டன்ஸ் எடுத்தது போலவே இருக்கிறதே என்கின்றனர்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயில் என்று கடந்த ஒரு மாதமாக ஆன்மிக பயணம் செய்த சசிகலா. அத்தனை சாமிகளையும் வேட்பாளர் பட்டியலில் இணைத்து விட்டார்.
தொகுதியில் செல்வாக்கானவர்கள் என்று பார்த்து பட்டியல் தயாரித்தார்களா அல்லது பெருமாள் பெயர், முருகன், சிவன் என்று பெயர் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்களா? என்று கேள்வி எழுந்துள்ளது.

சூரியன்கள்
ஏ.பாஸ்கரன், பரிதி இளம்வழுதி, விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் என பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பெருமாள்கள்
பலராமன், நரசிம்மன், ஏழுமலை, கே.எஸ்.சீனிவாசன், சு. கமலகண்ணன், ஆ.கோதண்டபாணி, இராமச்சந்திரன், கோவிந்தசாமி , வெங்கடாஜலம், திண்டுக்கல் சீனிவாசன், செந்தில்பாலாஜி, ராமச்சந்திரன், ராஜேந்திரபாலாஜி, கோவிந்தராஜன், ரெங்கசாமி என பெருமாள் பெயர்கள் வரிசை கட்டுகின்றன.

முருகன்
தட்சிணாமூர்த்தி, நீலகண்டன், நடராஜ் என சிவன் பெயர்களும் சக்திவேல் , மு.பழனி, முருகன், சுப்பிரமணியன், நார்த்தான்மலை ஆறுமுகம், சுப்பிரமணியன் என முருகன் பெயர்களும் வரிசை கட்டுகின்றன.

அம்மன்கள்
உமா மகேஸ்வரி, ராஜலட்சுமி, ராமஜெயம், மீனா, சந்திரபிரபா, வளர்மதி, என அம்மன், சந்திரன் பெயர்களும் இடம் பெறுமாறு பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஞாயிறு கிழமைகளில் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி திங்கட்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ரகசியம் இதுதானோ என்று கேட்கின்றனர்.

ஜெயம், விஜயம்
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் உள்ள 227 பேரில் முதலில் ஜெயலலிதா, கே.எஸ்.விஜயகுமார் என்று இந்து பெயரில் தொடங்கி மேரி கமலா பாய் என்று கிறிஸ்தவ பெயரில் பட்டியல் முடிகிறது. கூடவே பட்டியலில் நூர்ஜஹான், ஷாஜகான், தமிழ்மகன் உசேன் என முஸ்லீம் பெயர்களும் நடுவில் இடம் பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications