ஜெ.யின் கொடநாடு பங்களா கொலை.... டிரைவர் கனகராஜ் மர்ம மரணம்- வீடியோ

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இக்கொலை வழக்கில் முக்கிய நபரான ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்துள்ளா

Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த காவலர் ஓம் கதூர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரைபோலீசார் கைது செய்தனர். ஆனால் இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியானதாக போலீசார் கூறுகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடாநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

 Jayalalitha's car driver Kanagaraj killed in accident

இந்தக் கொலை வழக்கை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில், கேரளாவில் பதுங்கியிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஆனால், கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டதாக சேலம் போலீசார் கூறுகின்றனர். சேலத்தைச் சேர்ந்தவரான கனகராஜை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது. கனகராஜுக்கு தெரிந்த ரகசியங்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் இருக்கும் நிலையில் அவரைச் சார்ந்தவர்களின் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+