விசாரணையில் ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும்.. ஜெயக்குமார் பரபர
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கைவிரல் ரேகை வைத்த விஷயமும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை:ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கைவிரல் ரேகை வைத்த விஷயமும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இட்லி சாப்பிட்டார் என பொய் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் தெரிவித்தார். இதன் காரணமாக ஜெயலலிதா மரண விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பொய் சொன்ன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களும் விளக்கமளிக்க வேண்டும்
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று கூறிய அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

கைவிரல் ரேகை வைத்த விஷயமும்
இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை கமிஷனில் தண்டனை பெறுவார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

யாரும் தப்ப முடியாது
தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார். இதில் ஒளிவு மறைவு கிடையாது என்றும் ஜெயக்குமார் கூறினார். அந்த கமிஷன் அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் சொன்னவர்களிடம் விசாரணை
யார் யார் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொன்னார்களோ அவர்களிடம் கமிஷன் கண்டிப்பாக விசாரிக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார். விசாரணை அடிப்படையில் அறிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது
டி.டி.வி.தினகரனிடம் 5 சதவீதம் அளவுக்குத்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 95 சதவீதம் எங்களிடம் இருக்கிறார்கள். 5 சதவீதம் உள்ள அவருக்கு கட்சி சட்டதிட்ட விதிப்படி பொதுக்குழு கூட்ட உரிமை இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். எந்த தகுதியும் இல்லாமல் பொதுக்குழு கூட்டுவேன் என்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications