ஜெ.வின் தோழி பதர் சயீத் அதிமுகவில் இருந்து விலகல்!-ஆம் ஆத்மியில் இணைந்து போட்டி?!

இத்தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர் லெனின் வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞரான பதர் சயீத், கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த பதர் சயீத் பின்னர் மீண்டும் வக்பு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
மூத்த வழக்கறிஞரான பதர் சயீத் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கடந்த 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த முறை அதிமுக ஆட்சிக் காலத்தில் பதர் சயீத் வக்பு வாரியத் தலைவர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, பதர்சயீத்துக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பமனு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
பதர்சயீத், நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications