ஆஜராக கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி கமிஷனுக்கு ஜெ. பாதுகாவலர் பெருமாள்சாமி வருகை
ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராக கால அவகாசம் கோரி ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர் பெருமாள்சாமி வந்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலரான பெருமாள்சாமி நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் காலஅவகாசம் கேட்டு ஆறுமுகசாமி கமிஷன் முன்பு வந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் தனது விசாரணை தொடங்கினார். இதற்காக அவருக்கு எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை 7 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தினகரன் தரப்பு சார்பில் விசாரணை ஆணையத்திடம் பென்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் பெருமாள்சாமி 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி சம்மன் அளித்தார்.
ஆனால் பெருமாள்சாமியோ தான் ஆஜராக இன்னும் கொஞ்சம் காலஅவகாசம் கேட்டு ஆறுமுகசாமியை சந்தித்தார். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜரான நிலையில் மீண்டும் 23-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications