கரண்ட்டைப் பத்தி கவலையே படாதீங்க, எல்லாம் சரியாய்ரும்- ஜெயலலிதா ஆறுதல்
பொள்ளாச்சி: மின்சாரத்தை பற்றி யாரும் கவலைகொள்ள தேவையில்லை என பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து ஜெயலலிதா பேசினார்.
அப்போது பல்வேரு பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பொய் பிரசாரம்
முதல்வர் பேசும்போது, "கோவையில் உள்ள தொழில்நிறுவனங்கள் கர்நாடகா சென்றுவிட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். அங்குள்ள சாம்ராஜ் நகரில் தொழில்துவங்க தேவையான சாலைவசதி, மின்சாரம் என எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை.

அங்கு எப்படி தொடங்க முடியும்
அப்படி இருக்கும்போது அங்கு எப்படி தொழில்துவங்க செல்வார்கள் என்று யோசிக்க வேண்டும். கர்நாடக அரசை நம்பி நாங்கள் செல்ல தயாராக இல்லை என கோவை தொழில்அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

கர்நாடகம் 2வது இடம்தான்
சைமா அமைப்பும் இதைத்தான் தெரிவித்துள்ளது. எளிதில் தொழில்துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய திட்ட கமிஷன் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் இதற்கு அடுத்த நிலையில் இரண்டாம் அலகில்தான் உள்ளது.

உற்பத்தியில் கவனம்
தமிழகத்தில் மின்உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறேன். 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 500 மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது.

உண்மைதான்
3,300 மெகாவாட் மின்சாரம் நீண்டகால அடிப்படையில் வாங்கப்படும். மின்உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒருசில நாட்கள் மின்வெட்டு இருந்தது உண்மைதான்.

தற்போது இல்லை
தற்போது மின்வெட்டு நீக்கப்பட்டு அனைத்து மின்உற்பத்தி நிலையங்களிலும் நல்லமுறையில் மின்உற்பத்தி நடந்துவருகிறது. இதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும்.

வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள்
இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. உங்கள் வாக்கு சிதறிவிடக்கூடாது. உங்கள் வாக்கு இந்திய நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாற வேண்டும். அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால்தான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் வந்துசேரும்" இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications