ஜெ. தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணாதுரை கார் டிரைவர் மரணம்
சென்னை: திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (84). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் கார் டிரைவராக பணியாற்றியவராகும்.
1968ம் ஆண்டு வரை அண்ணாத்துரையிடம் பணியாற்றி விட்டு அவரின் மறைவுக்கு பிறகு அரசு விரைவு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதற்கிடையே பணி காலத்தில் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் இருந்து வந்த அவருக்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையும், அவருக்கு ஜாமீன் கிடைக்காததும் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நாள் முதல் தனது வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதனால் அவரது உடல் நிலை கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமானது. நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவியின் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சஞ்சீவிக்கு பஞ்சவர்ணம் (70) என்ற மனைவியும், கலையரசி (45) என்ற மகளும் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications