ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்... : ஜெயலலிதா உறுதி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தன் நெஞ்சில் தனி இடமுண்டு என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக, முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா, ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். சரித்திர சாதனையாக எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறியுள்ள ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

மாலை 5.30 மணிக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவை, வழியெங்கும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பூமழை தூவி வரவேற்றனர்
மக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, காசிமேடு பகுதியில் திரண்டிருந்து தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், என்னை வெற்றி பெற வைத்த வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
என்னை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த என் தொகுதி மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு என் நெஞ்சில் தனி இடமுண்டு.
கடந்த இடைத்தேர்தலின் போது பெருவாரியான வாக்குகள் வித்தியாகத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். நலத்திட்டங்களை, நான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். நான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியை தனித்துவம் மிக்க தொகுதியாக, தலை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றும் ஜெயலலிதா கூறினார். மகத்தான வெற்றி பெற வைத்து மீண்டும் முதல்வராக அமர வைத்த அன்பான வாக்காள பெருமக்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஜெயலலிதா கூறினார்.
காசிமேடு பகுதியில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா, தொடர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை,வ.உ.சி. சாலை சந்திப்பு,வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, மகாராணி தியேட்டர் உள்ளிட்ட 21 இடங்களில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வீதி வீதியாக ஆர்.கே.நகர் தொகுதியில் வலம் வந்த ஜெயலலிதாவை மேள தாளம் முழங்க, பூ மழை தூவி வாக்காளர்கள் வரவேற்றனர். நன்றி தெரிவித்ததன் மூலமாக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்றே தொடங்கி விட்டார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications