ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதை மறைக்கவே அறிக்கைகள்.. ஜெ. தோழி கீதா பகீர் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடந்தது என்று கூறுவது பொய் என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது தோழி கீதா தெரிவித்தார்.
சென்னை: எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் அவரது மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்ப நண்பரும், தோழியுமான கீதா தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்த நாள் முதல் அவர் இயற்கையாக இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று கீதா பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்றபோதும், இத்தனை நாள்கள் பன்னீர் செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி தமிழக அரசு டெல்லியில் அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து கீதா கூறுகையில், எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிட்டாலும் அதை நான் ஏற்க மாட்டேன். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதனால்தான் இறந்தார். 3 மாதங்கள் மௌனமாக இருந்து விட்டு தற்போது அறிக்கை வெளியிடுவதற்கான அவசியம் என்ன? ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ அறிக்கை என்னிடம் உள்ளது. நான் யாருக்காகவும் பயப்படமாட்டேன். எனது தோழி ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும். என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுகிறது என்றார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications