'சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுக்கும் ஜெயலலிதா': புதிய பேனர் வைத்த சசி ஆதரவாளர்கள்...
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் புதிய பேனரை அவரது ஆதரவாளர்கள் வைத்தனர
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா மட்டும் இருந்த பேனர் உடனடியாக மாற்றப்பட்டு, சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் புதிய பேனரை சசிகலாவின் ஆதரவாளர்கள் வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையின் கீழ் அதிமுகவினர் கட்சிப் பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடன் மண்டபத்துக்கு வெளியே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய பேனர்கள் வைக்கப்பட்டன. சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
மேலும் ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசு, தியாகத் தலைவி உள்ளிட்ட வாசகங்களும் அந்த பேனரில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜெயலலிதா மட்டும் தனியாக இருந்த பேனர் அகற்றப்பட்டது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications