டெல்லியில் மோடியை இன்று சந்திக்கிறார் ஜெயலலிதா
டெல்லி: ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முதலாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லி சென்றடையும் ஜெயலலிதா அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். சற்று நேரம் அங்கு ஓய்வு எடுக்கும் ஜெயலலிதா, மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிகிறது.

ஜெயலலிதாவுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், முதல்வரின் செயலாளர்கள் வெங்கட் ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர். அப்போது, தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 32 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறார்.
இரவு 7 மணிக்கு டெல்லி விமான நிலையம் செல்லும் ஜெயலலிதா, தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இரவு 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் திரும்புகிறார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications