இலங்கை சிறையில் இருந்து 84 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 84 தமிழக மீனவர்களையும், 62 படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த அவரது கடிதத்தில், "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 மீனவர்களையும், அவர்களது 62 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1974, 1976ம் ஆண்டுகளில் இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட சர்வதேச கடல் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் மீண்டும், மீண்டும் மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications