5 பேர் பலியான நிலையில் இன்று ஜெ. பிரசார கூட்டம்... திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார கூட்டங்களில் வெயிலின் கோரத்தாண்டவத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் இன்று ஜெயலலிதாவின் அடுத்த பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்துக்காக அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் 5 பேர் வெயிலில் சுருண்டு இறந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கந்தர்வகோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 19 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில்தான் வருகிறார். இருப்பினும் திருச்சி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல திருச்சி போலீஸ் கமிஷனர் தடை விதித்துள்ளார். இதனால் கனரக வாகனங்கள் மாற்று வழியாக பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லும் கனரக வாகனங்கள் திருச்சிக்குள் செல்லாமல் பெரம்பலூரில் இருந்து முசிறி குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியே சுற்றி சென்று நான்கு வழிச்சாலையை பிடிக்க வேண்டும்.
சென்னையில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி வராமல் பெரம்பலூரில் இருந்து குன்னம், அரியலூர், திருவையாறு, தஞ்சை, புதுகை செல்ல வேண்டும். இதனால் கனரக வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications