ஏற்காடு இடைத்தேர்தல்- நாளை முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாளை முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. வேட்பாளராக சரோஜா போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள், மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் தீவிரபிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் கிராமங்களில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதா நாளை சேலம் வருகிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர் உடையாப்பட்டி ஹோலிகிராஸ் பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் தேர்தல் பிரசார வாகனத்தில் ஜெயலலிதா அங்கு இருந்து புறப்படுகிறார். முதலில் அவர் மின்னாம்பள்ளியில் பேசுகிறார். பின்னர் காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட் வழியாக வெள்ளாளக்குண்டம் பிரிவு ரோட்டில் பேசுகிறார்.
அங்கிருந்து காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு வழியாக செல்லும் முதல்வர் ஜெயலலிதா வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பேசுகிறார். அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு பேளூர் சாலை பிரிவு, துக்கியம்பாளையம், அத்தனூர்பட்டி வழியாக பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர்.சிலை அருகில் பேசுகிறார்.
பின்னர் பள்ளத்தாதனூர், நடுப்பட்டி வழியாக நீர்மூழ்கி குட்டை வருகிறார். அங்கும் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து ராஜாப்பட்டினம், பூசாரிப்பட்டி வழியாக அனுப்பூர் பிரிவு ரோடு வழியாக கூட்டாத்துப்பட்டிக்கு செல்லும் முதல்வர் வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து பேசுகிறார்.
பிறகு சர்க்கார் நாட்டார் மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு வழியாக வலசையூர் சென்று பிரசாரம் செய்கிறார். பின்னர் ராமர் கோவில் வழியாக செல்லும் ஜெயலலிதா அயோத்தியாப்பட்டணத்தில் பிரசாரம் செய்கிறார். அதையடுத்து உடையாப்பட்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மின்னாம்பள்ளியில் தனது பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா உடையாப்பட்டியில் தனது பிரசாரத்தை முடித்து கொள்கிறார். 9 இடங்களில் பிரசாரம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications