விருத்தாச்சலம் நெரிசலில் 2 தொண்டர் பலி எதிரொலி.. பிரச்சார நேரத்தை மாற்றிய ஜெ.
சென்னை: விருத்தாச்சலம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து தனது பிரச்சார நேரத்தை மாற்றியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கடந்த 9, தேதி சென்னையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அடுத்ததாக 11ம் தேதி விருத்தாச்சலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அன்றைய தினம் 3 மணிக்கே ஜெயலலிதா மேடையேறினார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 11 மணியளவிலேயே கூட்டத்தில் அமர வைக்கப்பட்ட மக்கள் வெயிலிலேயே சுமார் 4 மணி நேரங்களாக காத்துக் கிடந்தனர்.
இதில், வெப்பத் தாக்குதலுக்கு ஆளான சிலர் மயக்கமடைந்தனர். ஜெயலலிதாவின் உரைகு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மயங்கி விழுந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்தாண்டை விட இம்முறை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், அரசு அதிகாரிகளே மாவட்ட வாரியாக, பொதுமக்கள் தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியே சுற்ற வேண்டாம் என எச்சரித்த நிலையில், இவ்வாறு மக்கள் வெயில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்கள் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடும் வெயிலாக இருப்பதால் ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன.
ஆனபோதும். விருத்தாச்சலம் சம்பவத்தைத் தொடர்ந்தும் அவர், கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரியில் மாலை 3 மணியளவிலேயே பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் மக்கள் நலனில் ஜெயலலிதாவிற்கு அக்கறை இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் மாலை 6 மணியளவிலேயே நடைபெற்றது. இதனால், ஜெயலலிதாவைப் பார்க்கும், அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் வெயியில் காய வேண்டிய அவஸ்தையிலிருந்து மக்கள் தப்பினர்.
இதேபோன்று இனி வரும் பிரச்சாரங்களும் மாலை நேரத்திலேயே நடைபெற்றால், வசதியாக இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications