"அம்மா" என்றால் அன்பு இல்லை பாஸ்.. 11...!
சென்னை: அம்மா என்றால் அன்பு என்று ஒரு பாட்டு உண்டு. சாட்சாத் ஜெயலலிதா குரலில் வந்த பாட்டுதான் அது. ஆனால் இப்போது அம்மா என்றால் 11 என்றுதான் கூப்பிட வேண்டும் போல. அப்படி ஒரு செம பொருத்தமாகியுள்ளது அந்த எண்ணுக்கும், ஜெயலலிதாவுக்கும்.
ஜெயலலிதாவுக்கு காலத்துக்குக் காலம் ராசி எண் மாறுகிறது. முன்பு 9 இருந்தது. பின்னர் 7 வந்தது. இப்போது 11 வந்துள்ளது.
அந்த வகையில் இப்போதைய லேட்டஸ்ட் ராசி எண் 11ஐ உற்றுப் பார்ததால் சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்க முடிகிறது.

சிறை...
கடல் காவு கொண்ட லெமூரியாக கண்டத்துக்குப் பிறகு தமிழகம் கண்ட பெரிய "கண்டம்" ஜெயலலிதாவுக்கு வந்த சிறைத் தண்டனைதான். அந்த வழக்கில் சிக்கி சிறைக்கும் போய் விட்டார் ஜெயலலிதா.

விடுதலை...
அப்படிப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்த நாள் மே 11 ஆகும். அதாவது 11 என்ற எண் அன்றிலிருந்துதான் ஜெயலலிதாவின் ராசியாக மாறியது.

தொகுதி எண்...
சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதா பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியின் எண் 11 ஆகும்.

விருப்பமனுக் கட்டணம்...
அடுத்து தற்போது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான கட்டணம் ரூ. 11,000. எனவே இதிலும் 11 வந்து விட்டது.

விதி எண் 110...
அடுத்து ஜெயலலிதா சட்டசபையில் அதிக அளவில் வாசித்த அறிக்கைகள் அனைத்துமே விதி எண் 110ன் கீழ். எனவே அதிலும் 11 வந்து விட்டது.

1100...
இப்போது அவர் தொடங்கியுள்ள அம்மா அழைப்பு மையத்தின் சேவை எண்ணும் கூட 1100தான். இதிலும் 11 வந்து விட்டது.

இரட்டை இலை...
இப்படி 11 என்ற எண் தொடர்ந்து கொண்டே வருகிறது. அட அதைக் கூட்டிப் பாருங்களேன்.. 2 என்று வரும்.. இரட்டை இலை!?












Click it and Unblock the Notifications