காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் பலி- முதல்வர் இரங்கல்
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அந்தோணி நிர்மல் விஜி உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதன்கோட் என்ற இடத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அந்தோணி நிர்மல் விஜி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளார்.

ரூ 10 லட்சம் நிதி உதவி
மேலும் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜி அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications