வெள்ளம் பாதித்த பகுதிகளை தனித்தனியே பார்வையிட்ட மோடி, ஜெ.
சென்னை: கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட பகுதிகளை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
வரலாறு காணாத மழைவெள்ளத்தால் சென்னை நகரமே தனித் தனி தீவுகளாகிப் போய்விட்டன. அனைத்து சாலை, ரயில், விமான போக்குவரத்து 2-வது நாளாக முடங்கியுள்ளது.

தனி விமானம் மூலம் வருகை
இந்நிலையில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு மோடி வருகை தந்தார்.
|
ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் ஆகியோரும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

ரோசைய்யா- ஜெ.வுடன் சந்திப்பு
இதன் பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழக, மழை வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தனி விமானத்தில் பார்வை
இதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் சென்னையின் மோசமான வெள்ள பாதிப்புகளையும் மோடி பார்வையிட்டார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜெ. ஆய்வு
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று பிற்பகல் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானப் படை விமானிகள் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications