ஜெ. சொத்துக் குவிப்பு - அப்பீல் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் விசாரணை இது.
இன்றைய விசாரணையில் அனைத்துத் தரப்பும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர்..

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை பி.வி.ஆச்சார்யா வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார்.
இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றே அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்குகிறது. இன்றுடன் விவாதங்கள் அனைத்தும் முடியும் என்று தெரிகிறது. கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா நாளையும் தனது வாதத்தை எடுத்து வைக்கவுள்ளார்.
இன்றைய அமர்வின்போது இந்த அப்பீல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று கூறித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்கவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications