மக்க கலங்குதம்மா... #Jayalalithaa
தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது. ஜெயலலிதா மரணமடைந்த இந்த ஓராண்டில் எத்தனையோ காட்சிகளை தமிழகம் கண்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கண்ணீரும், கதறலுமாய் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அம்மா இல்லாத இந்த ஒரு வருஷம் தமிழ்நாடே ரொம்ப கஷ்டப்படுது. நாங்க எல்லாம் தடுமாறிட்டு இருக்கோம் என்று கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர் தொண்டர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த ஓராண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே இதை உணர்த்துகிறது.

மாறிய காட்சிகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவும் தமிழக அரசியல் களமும் இதற்கு முன்னர் பார்க்காத பல காட்சிகளை பார்த்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தலைமை வழக்கம் போல் சசிகலாவின் கைகளுக்குச் சென்றது. அம்மா அம்மா... என்று முழங்கிய வாய்கள் சின்னம்மா என்று முழங்கின.

பிளவும், இணைவும்
நள்ளிரவில் ஓபிஎஸ் முதல்வரானார். எல்லாம் சில நாட்களே. கட்சி மட்டுமல்ல ஆட்சியும் தனது கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்று நினைத்த சசிகலா, முதல்வராக ஆசைப்பட்டார். தர்மயுத்தம் வெடித்தது. ஆனால் சசிகலா சிறைக்கு சென்றார். கட்சி பிளவுபட்டது. இரட்டை இலையும் முடக்கப்பட்டது. பிளவுபட்டவர்கள் ஒன்றாக இணைந்தனர்.
சின்னமும் மீட்கப்பட்டது. ஒன்றாக இணைந்து நினைவுதினத்தை அனுசரித்து வருகின்றனர்.

ராணுவக்கட்டுப்பாடு
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு அரசியலில் அதிமுகவில் ராணுவ கட்டுப்பாடு காணாமல் போய்விட்டது. அதிமுக என்ற யானையை அடக்கும் அங்குசமாக இருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பின்னர் தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதாவின் உறுதி
மக்களால் நான், மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா தான் செல்லும் இடங்களில் எல்லாம் முழங்குவார். இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள். அவர்தான் மறைந்து விட்டார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீருடன் கலங்கி வருகிறார்கள் மக்கள். தங்கள் வீட்டில் ஒருவர் மரணமடைந்தால் எப்படி கலங்குவார்களோ அப்படி நினைத்து கலங்குகின்றனர்.

கலங்கும் தலைவர்கள்
தாயை இழந்த பிள்ளைகள் எப்படி தவிக்குமோ அப்படித்தான் உள்ளது அதிமுகவின் நிலையும், தமிழகத்தின் நிலையும். ஜெயலலிதா என்ற ஒருவரை நம்பித்தான் மக்கள் வாக்களித்தனர். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து 8 மாதத்திற்குள் அவர் மரணமடைவார் என்பது யாராலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்துகிறது என்று கூறினாலும் அவர் இல்லாத தமிழகம் தள்ளாடித்தான் போயுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications