ஜெ., மரணம்: எடப்பாடி அறிவித்தபடி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க உடனடியாக நீதிபதியை நியமிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க உடனடியாக நீதிபதியை நியமிக்கக் கோரி அதிமுகவை சேர்ந்த குடவாசல் முருகானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று தர்மயுத்தம் நடத்தினார் முன்னால் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்.

பிளவுபட்டிருந்த ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பதற்கு முன்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டு இத்தனை நாட்கள் கடந்த பின்னரும் எந்த ஆணையமும் அமைக்கவில்லை. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பேச்சாளர் குடவாசல் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் இரு அணிகள் இணைப்பின் போது விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
40 நாட்களுக்கு மேலாகியும் ஆணையம் அமைக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வரும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
விசாரணை முடியும் வரை ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேச தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவளாராம். விசாரணையின் போது தனது தரப்பில் உள்ள பல முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications