ஜெயலலிதா சொத்துமதிப்பு ரூ.117 கோடி... 4 ஆண்டுகளில் இருமடங்கானது!!
சென்னை: தனக்கு 117 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு ரூ. 51.40 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் கடந்த மாதம் 17ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பான முறையான அறிவிக்கை கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டதும், வேட்புமனு தாக்கலும் தொடங்கியது.
முதல்நாளில் சுயேச்சை வேட்பாளர்களாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ‘தேர்தல் மன்னன்' பத்மராஜன், அகமது ஷாஜஹான் ஆகியோரும், இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் ரவி பறையனார், மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி சார்பில் ஆபிரகாம் ராஜ் மோகன் என 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 4ம் தேதி யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

வேட்புமனு தாக்கல்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2.05 - 2.08 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப்பத்திரத்தில் தனது சொத்து மதிப்புக்களை குறிப்பிட்டுள்ளார்.

ரூ.117 கோடி சொத்துக்கள்
ஜெயலலிதா தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தனக்கு ரூ.117 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.45.04 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.72.09 கோடியாகும்.

வேதாநிலையம்
ஜெயலலிதா தங்கியுள்ள போயஸ்தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தின் மதிப்பு ரூ.44 கோடியாகும். ஹைதாராபாத்தில் உள்ள 14.50 ஏக்கர் விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.14.44 கோடியாகும்.

9 கார்கள்
தனக்கு 9 வாகனங்கள் இருப்பதாக கூறியுள்ளார். அவற்றின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ.42.25 லட்சம். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக தன்னுடைய 21280.300 கிராம் தங்க நகைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரி
2013-2014 ம் ஆண்டு ரூ.33.32 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2011 சொத்துமதிப்பு ஓர் ஒப்பீடு
ஜெயலலிதா கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது தனக்கு ரூ. 51.40 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் அசையும் சொத்துகள் ரூ. 13.03 கோடி எனவும், அசையா சொத்துகள் மதிப்பு ரூ. 38.37 கோடி எனவும் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications