அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா இன்று பிரசாரம்
மதுரை: அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென் மாவட்டங்களில் போட்டியிடும் 14 அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ந்தேதி சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். புதன்கிழமை தருமபுரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 11 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார். இதற்காக அருப்புக்கோட்டை- தூத்துக்குடி சாலையில் உள்ள காந்தி நகரில் 6 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் அருப்புக்கோட்டைக்கு செல்கிறார்.
அங்கு விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், ராமநாத புரம், கோவில்பட்டி, விளாத் திக்குளம் ஆகிய 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான அ.தி. மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஐ.ஜி.முருகன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications