தேர்தல் விதி... வேட்புமனுத் தாக்கலின் போது அரசு காரை தவிர்த்த ஜெயலலிதா
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் விதிமுறைகளின் படி அரசு காரைத் தவிர்த்து வேறு காரில் சென்றார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

இன்று தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அவரின் மாற்று வேட்பாளராக அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தேசிய கொடி கட்டிய அரசு காரில் புறப்பட்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் வந்ததும் வேறு காருக்கு மாறினார். பின்னர் அந்தக் கார் மூலம் தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தேர்தல் விதிகளின் அடிப்படையில் அரசு காரைத் தவிர்ப்பதற்காக, ஜெயலலிதா இவ்வாறு கார் மாறியதாகக் கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications