அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றம்: வைகை செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு - ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராஜா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சிட்டிங் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தார். இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்துராஜா மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சிட்டிங் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு நுழைந்தார். அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவின் இளைஞர் பாசறை செயலாளர், அரசு கொறாடா என பல பதவி வகித்தவர் வைகைச் செல்வன்.
மதுரை மாவட்டம் சிலமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர் வைகைச் செல்வன். ஆனால் அவரை கடந்த 2013ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் மேலே வரவே முடியவில்லை. இப்போது அவருக்கு மீண்டும் சீட் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications