முதல்வரின் உடல்நிலை குறித்து வைகோவிடம் விளக்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்டு வைகோவிடம் விளக்கியுள்ளார். அப்போது வைகோ, நீங்கள் அளிக்கும் சிகிச்சையால் நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம் என்று நன்றி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., நுரையீரல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. அவருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான மருந்துகளும் செலுத்தப்பட்டது. இதில் அவர் ஓரளவு குணம் அடைந்து வந்தார்.

Jayalalithaa health condition: London doctors explains to me says Vaiko

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் ஜெயலலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வதந்திக்கு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இன்று வைகோவும், டாக்டர் கிருஷ்ணசாமியும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இன்றைக்கு தமிழகத்திலேயே அனைவருடைய உள்ளத்திலும் கவலை ஏற்படுத்தியிருக்கிற காவிரி பிரச்னையை முறையாக சட்டப்பூர்வமாக அணுகி உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை உணர வைத்து, பாதுகாத்து கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்தநிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறி்த்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நான் மருத்துவர்களிடம் பேசினேன்.

குறிப்பாக ரிச்சர்டு பீலே, முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கினார். அவருடைய விசிட்டிங் கார்டைகூட என்னிடம் கொடுத்தார். அப்போது அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். எங்களுடைய முதலமைச்சரின் உடல் நலத்தை குறித்த அக்கறையோடு, உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய வைத்தியத்திலேயே நலமாக இருப்பதை நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார். எனவே முதல்வர் ஜெயலலிதா, முழு உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று இயற்கை அன்னையுடைய அருளை நாள் யாசிக்கிறேன் என்று கூறினார் வைகோ.

அன்பு சகோதரி ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போனது வைகோவிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மைதான். இதனால்தான் மருத்துவரிடம் நீண்ட நேரம் பேசிய வைகோ, ஆளுநரிடமும் பேசி உண்மை நிலையை விளக்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+