ஜெயலலிதா பற்றி வதந்தி: தி.மு.க.வினரின் சமூக வலைதளங்களை முடக்குவதாக டி.ஜி.பி.யிடம் புகார்
சென்னை: எவ்வித முகாந்திரமும் இல்லாமலும், தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் வலைதள கணக்குகளை முடக்குவதோ, அச்சுறுத்துவதோ அல்லது அவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை மேற்கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று தி.மு. கழக சட்டத்துறை சார்பாக காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு டி.ஜி.பி., சென்னை நகர கமிஷனர், சைபர் கிரைம் துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரிடம் தி.மு.க. சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன் கொடுத்துள்ள மனு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்கள் சமூக வலைதளத்தில் முதல்வரின் உடல் நிலை குறித்து தவறாக வதந்திகள் பரப்பி வருவதாக அவர்கள் மீது காவல்துறை சைபர் கிரைம் பிரிவு நடவடிக்கை மேற் கொண்டு சிலரை கைது செய்தும் உள்ளது.

திட்டமிட்டு தீய நோக்கத் தோடு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் இந்த நடவடிக்கையின் பெயரால் காவல்துறையின் சைபர் பிரிவினர் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் முகநூல் கணக்கையும், அவர்களின் வலைதள செயல்பாட்டையும் முடக்கியது மட்டுமல்லாமல், ஒருசிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்கள்.
சைபர் கிரைம் பிரிவினர் குறிப்பாக திமுகவைச் சேர்ந்தவர்களின் வலை தளங்களை பின்தொடர்ந்து அவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மிரட்டி வருவதாக தி.மு.க. தலைமைக்கு புகார் வந்த வண்ணம் உள்ளன.
எனவே இதுகுறித்து தாங்கள் உரிய விசாரணை இன்றியும்-எவ்வித முகாந்திரமும் இல்லாமலும், தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் வலைதள கணக்குகளை முடக்குவதோ, அச்சுறுத்துவதோ அல்லது அவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை மேற்கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று திமுக சட்டத்துறை சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications