For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கம் தேர்தல் வானில் மின்னப் போகும் 138 "ஸ்டார்கள்".. ஆனா "சிம்ம நட்சத்திரம்" இல்லையே!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் கட்சிகள் அளித்துள்ளன. அதன்படி, அனைத்து கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 138 நட்சத்திரப் பேச்சாளர்கள் ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, அவரது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியும், முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Jayalalithaa not to campaign in Srirangam

இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலும் செய்துள்ளனர்.

அதன்படி, ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கும் நட்சத்திர பேச்சாளர்கள் குறித்த பட்டியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் அதிகாரி சக்சேனாவிடம் இன்று அளிக்கப்பட்டது. அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 40 நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வரவில்லை!

அதிமுகவின் சார்பில் அளிக்கப்பட்ட பட்டியலில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயர் இல்லை. எனவே, ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்ய மாட்டார் என உறுதியாகி விட்டது.

இதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் 9 நட்சத்திர பேச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

English summary
It has come to know that the ADMK general secretary Jayalalithaa has decided to avoid campaigning in Srirangam by-election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X