மதுரையில் மு.க. அழகிரியை விமர்சிக்காமல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா
மதுரை: அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுரையில் நேற்று பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மு.க.அழகிரி குறித்து எதுவுமே பேசாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தார்.

அங்கு பேசிய ஜெயலலிதா, குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இதை உங்களால் சாதிக்க முடியும்" என்று வழக்கம் போல பேசினார்.
ஆனால் திமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரி பற்றி எதுவுமே ஜெயலலிதா பேசவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, மு.க. அழகிரியிடம் இருந்து மதுரையை மீட்பேன் என்று அழகிரியை குறி வைத்து தாக்கி பேசினார் ஜெயலலிதா.
தற்போது மு.க. அழகிரியைப் பற்றி ஒருவார்த்தை கூட ஜெயலலிதா பேசாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அழகிரியை தொடர்ந்து விமர்சிப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் மதுரை அதிமுகவினர் மூழ்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications