இந்தியாவைப் பற்றி எனக்கொரு கனவுண்டு... அதில் தமிழகத்துக்குப் பெரும் பங்கு! - ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவைப் பற்றி எனக்கு ஒரு கனவு உண்டு. அதில் தமிழகம் முக்கியப் பங்காற்றும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் ரூ.5 ஆயிரத்து 81 கோடி மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழிற் சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவிருக்கிறார்கள்.

விஷன் தமிழ்நாடு 2

இந்த விழாவில் தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023- இரண்டாவது பகுதி, தமிழ் நாடு தொழில் கொள்கை - 2014, தமிழ்நாடு மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் கொள்கை -2014, தமிழ்நாடு உயிரி தொழில் நுட்ப கொள்கை ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் - 2013 இரண்டாம் பாகத்தின் முதல் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார், தொழில்கொள்கை 2014 புத்தகத்தை சி.ஐ.ஐ.தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கொள்கை புத்தகத்தை தொழில் அதிபர் வேணுசீனிவாசன், உயிரி தொழில்நுட்ப கொள்கை புத்தகத்தை இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (பிக்கி) தலைவர் சித்தார்த் பிர்லா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்

விழாவில், தமிழ்நாடு உள் கட்டமைப்பு வாரியத்தின் இணையதளத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்து வதற்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தொலை நோக்கு திட்டம் 2023-ன் படி பணிகளை முடிப்பதற்கு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதன்படி ஆண்டுதோறும் தமிழகத்தில் உற்பத்திப் பிரிவில் 14 சதவீதம் வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளேன்.

மேலும், 2023-ம் ஆண்டுக்குள் அனைத்து பிரிவுகளிலும் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதும் இலக்கு ஆகும். இதை எட்டுவதற்காக, 2012-ம் ஆண்டு என் முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றின் முதலீட்டுத்தொகை 26 ஆயிரத்து 645 கோடி ரூபாய்.

Jayalalithaa reveals her dream on Tamil Nadu

1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு வேலை

இன்று என் முன்னிலையில் தொழிற்சாலைகளுக்காக கையெழுத்தாகும் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 5081 கோடி ரூபாய் உள்ளடக்கி உள்ளது. இதன் மூலம் 16 ஆயிரத்து 282 பேர் வேலைவாய்ப்பை பெற முடியும்.

ஆக, இந்த 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இப்போதுள்ள எனது அரசு காலகட்டத்தில் 31 ஆயிரத்து 706 கோடி ரூபாய் முதலீடும், அதன் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 667 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தொழில்களுக்கு உகந்த மாநிலம்

தொழில்களில் முதலீடு செய்வதற்கு உகந்த இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு புள்ளி விவரங்களை பார்த்து இதை தெரிந்து கொள்ளமுடியும். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கருத்துப்படி கடந்த 2011 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரையில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 800 கோடி ரூபாய்.

முதலீட்டில் சாதனை

தமிழ்நாடு, முதலீட்டில் 18.2 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குஜராத், மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைவிட அதிகம் ஆகும். சாதனைகள் பல செய்யப்பட்டு இருந்தாலும் அதோடு நான் திருப்தி அடைந்துவிடுவதில்லை. தமிழகத்துக்கு மேலும் மேலும் முதலீடுகள் வந்து குவிய வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு

இதற்காக வரும் அக்டோபர் மாதம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்முறையாக தமிழகத்தில் நடத்த முன்வந்துள்ளேன். எனது அரசின் மீது நம்பிக்கை வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ள தொழிற்சாலை களுக்கு நன்றி. எனது அரசு உங்களுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்.

ஏற்கனவே தமிழகத்தில் வளர்ந்துள்ள பல தொழில்கள் போல், உங்கள் தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்யும். நாமே நமக்கு நிர்ணயித்துள்ள காலகட்டத்துக்குள் அந்த நோக்கத்தை அடைவதற்காக நாம் கூட்டாக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவைப் பற்றிய கனவு

எனக்கு இந்தியாவைப் பற்றிய ஒரு கனவு உண்டு. அதில் தமிழகம் ஒரு முக்கிய பங்காற்றும். திறந்த சந்தையான தேசம், அறிவாற்றலின் பிறப்பிட மான தேசம், வளர்ச்சிபெற்ற தேசம், நிலையான அமைதி, மேம்பாடு கொண்டதேசம் என்பது இந்தியாவைப்பற்றிய எனது கனவு. அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

தமிழ்நாடு தொலை நோக்கு திட்டம் 2023 - ஐ நனவாக்கவேண்டும் என்பதற்காக என்னை நான் அர்ப்பணித்து இருக்கிறேன். அந்த அர்ப்பணிப்போடுதான் அதன் இரண்டாவது திட்டத் தையும் இன்று வெளியிட்டுள்ளேன்.

வேளாண்மைக்கு முக்கியத்துவம்

இந்த இரண்டாவது தொலைநோக்கு திட்ட அறிக்கையில் மின்சாரம், போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகம், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள், வேளாண்மை உள்பட 6 முக்கிய பிரிவுகளில் 217 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அறிவிப்புகள் அடங்கியுள்ளன. தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 முதலில் வெளியிட்டபோது கூறப்பட்ட சில கருத்துகள் இந்த இரண்டாவது பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி வேளாண்மை பிரிவில் செய்யப்பட்ட முதலீடு 40 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உயர வழி வகுத்தது.

மனித மேம்பாட்டு துறையிலும் திட்டமிடப்பட்ட முதலீட்டுத்தொகை 30 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 59 ஆயிரத்து 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் எதிர்பார்க்கப்படும் திட்டமிடப்பட்ட முதலீட்டுத் தொகை 15 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதால், தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் நோக்கத்தின் எதிர்பார்ப்பை நம்மால் அடையமுடியும் என்பது உறுதி.

வேளாண் துறையில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது அதன் வளர்ச்சிக்காக உந்துதல் அளிக்கும்போது அந்த துறையில் மேலும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அவசிய மாக உள்ளது. 2011-ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது கடந்த ஆட்சியாளர்களால், மின்திட்டங்களால் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனை எங்கள் அரசு சுமக்க வேண்டியதாயிற்று.

மின் திட்டங்கள்

கடந்த 2 ஆண்டுகளாக மின்பகிர்மாணம் மற்றும் மின் கடத்தல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக எனது அரசு மேலும் பல திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றின் மூலம் விரைவாக செய்யப்படுவதோடு மின் உற்பத்தி திறனில் கூடுதலாக 2500 மெகாவாட் சேர்க்கப்பட்டுள்ளது. 3300 மெகாவாட் கொள்ளளவுக் கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதோடு கூடுதல் திறன் சேர்ப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்படு கின்றன.

நீண்ட மற்றும் குறுகிய கால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. 400 கிலோ வோல்ட் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற் காக பசுமை மின்சார வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், எனது அரசிடம் புதிய சூரிய மின் சக்திக் கொள்கைகளும் உண்டு. எனவே, 2011-ம் ஆண்டு கடுமையான மின் வெட்டு இருந்தநிலை மாறி தற்போது அரசு எடுக்கும் இந்த முயற்சிகளால் போதுமான மின்சாரம் கிடைக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

தொழில் கொள்கை ஏன்?

2014-ம் ஆண்டில் புதிய தொழில் கொள்கையை வெளியிடுவதற்கு காரணம், தமிழ்நாடு உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளுக்கான ஒரு போட்டி தளமாக திகழவேண்டும் என்பதற் காகத்தான். மாநிலத்தில் தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுடன் தொழில்கள் நடத்துவதற்கான சூழ்நிலை இந்த தொழில் கொள்கைகள் கொண்டுள்ளன.

இது தமிழ்நாட்டை முதலீட்டுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்றும் என்பது உறுதி. அதோடு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்பதும் உறுதி. உற்பத்தி துறையில் தமிழகம் உலகளாவிய கேந்திரமாக விளங்கும்.

மோட்டார் வாகனங்களுக்கு தனி கொள்கை

மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான தனி கொள்கையை எனது அரசு கொண்டுவந்துள்ளது. இது தமிழ்நாட்டில் மேலும் பல மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான தொழிற்சாலைகள் அமைவதற்கு வாய்ப்பு அளிக்கும். இந்த கொள்கையின் நோக்கம் மோட்டார் வாகன தொழில் மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதும், உலகத்தில் முதல் 5 ஆட்டோ மொபைல் உற்பத்தி கேந்திரமாக விளங்கும் பட்டியலில் சென்னை இடம்பெற வேண்டும் என்பதும்தான்.

புது இணையதளம்

உயிரி தொழில் நுட்ப வளர்ச்சிக்காக எனது அதற் கான புதிய கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை விரைவாக அமல்படுத்துவதற்காக தனி சட்டங்களும், அதன்மூலம் வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ள.

கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அமல் படுத்தவதற்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இதற்கான புதிய இணையதளத்தை இன்று தொடங்கிவைத்துள்ளேன்," என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+