முதல்வர் ஜெ.வின் செயல்பாடு: பெரும்பாலானோர் அதிருப்தி- ஜூ.வியின் பரபரப்பு சர்வே
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து ஜூனியர் விகடன் வாரம் இருமுறை பத்திரிகை நடத்திய சர்வேயில் சூப்பர் என வெறும் 27.95% பேர்தான் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள்தான் உள்ளன... அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது போல பரபரப்பாக சுழலுகின்றன.
அ.தி.மு.க. தன் பாணியில் பிரசாரத்தை நடத்தி வருகிறது... தற்போது சமூக வலைதளங்களிலும் அதிதீவிரமாக களமாடி வருகிறது. தி.மு.க, பா.ம.கவும் தொடர்ந்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
தே.மு.தி.க, த.மா.கா., பா.ஜ.க. ஆகியவை என்ன முடிவெடுப்பது என திக்கு தெரியாமல் முழித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறை பத்திரிகை அதிரடியாக சர்வேக்களை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 16,846 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டும் 6,163 பேர்.

ஜெ. செயல்பாடு
இவர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடு எப்படி என்ற கேள்விக்கு கிடைத்த ரிசல்ட்:
சூப்பர்- 27.95% (4,708 பேர்)
சுமார் - 39.37% (6,632 பேர்)
மோசம்- 16.22% (2,733 பேர்)
மிக மோசம் - 16.46% (2,733 பேர்)

ஜெ.வுக்கு மதுரை ஆதரவு
ஜெயலலிதாவின் செயல்பாடு சூப்பர் என மதுரை மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 1,651 பேர் தெரிவித்துள்ளனர். சென்னையில் 1,422, திருச்சியில் 1024, கோவையில் 611 பேர்தான் சூப்பர் என தெரிவித்திருக்கின்றனர்.
அதே மதுரை மண்டலத்தில்தான் ஜெயலலிதாவின் செயல்பாடு சுமார் என 2,276 பேர் கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவின் செயல்பாடு மிக மோசம் என சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 962 பேர் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்
இதேபோல் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு கிடைத்த ரிசல்ட்:
கருணாநிதி- 41.70% (7,024 பேர்)
விஜயகாந்த் - 13.81% (2,327 பேர்)
வைகோ - 13.43% (2,262 பேர்)
ராமதாஸ்- 6.58% (1,109 பேர்)
இளங்கோவன் - 3.96% (667 பேர்)
மற்றவர்கள் - 20.52% (3,457 பேர்)

கருணாநிதிக்கும் மதுரை ஆதரவு
சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதிதான் என மதுரை மண்டலத்திதான் அதிகபட்சமாக 2,548 பேர் தெரிவித்துள்ளனர். விஜயகாந்துக்கு சென்னை மற்றும் மதுரையில் சமமான ஆதரவாக 744, 707 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைகோ சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என மதுரையில் 807 பேரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications