Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்புமகனாக தத்தெடுத்து நடத்திவைத்த பிரம்மாண்ட திருமணம்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் மிகமுக்கியமான சறுக்கலாக இருந்தது.

யார் இந்த சுதாகரன். திடீரென்று எப்படி வளர்ப்புமகனானார் என்பதை பார்க்கும் முன்பாக தோழி சசிகலாவின் உறவினர்கள்... அவர்களின் மகன்களைப் பற்றி தெரிந்து கொள்கொள்வோம்.

Sudhakaran

சசிகலாவின் உறவினர்கள் திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி

டிடிவி தினகரன்

டி.டி.வி. என அ.தி.மு.க-வினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார்.

ஜெ.ஜெ டிவி பாஸ்கரன்

முன்பு ஜெயலலிதா தொடங்கிய, ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்தவர், பாஸ்கரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன். அரசியலில் ஆர்வம் இல்லாத காரணத்தால், ஆரம்பத்தில் இருந்தே போயஸ் கார்டன் பக்கம் நெருங்கியது இல்லை.

வளர்ப்பு மகன் சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது.

பிரம்மாண்ட திருமணம்

இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமாக சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்தியலட்சுமிக்கும் திருமணம் செய்துவைத்தார். அதுவே 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெயலலிதா.

சின்ன எம்.ஜி.ஆர்

அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில்'சின்ன எம்.ஜி.ஆர்.' என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம்பரத்தோடு வலம் வந்தார்.

போதைப்பொருள் வழக்கு

2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தியாகராயநகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது.

கொலை மிரட்டல் வழக்கு

துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

புலித்தோல் விவகாரம்

அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங்களில் சிக்கினர்.

சுதாகரன் பங்குதாரர்

சிறுதாவூர் நில விவகாரத்தில் தொடர்புடையதாக பேசப்பட்ட பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்திலும் சுதாகரன் பங்குதாரர்.

சொத்துக்குவிப்பு வழக்கு

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரில் சுதாகரனும் ஒருவர்.

பெயர் மாற்றியும் பலிக்கவில்லை

தனது பெயரை 'சுதாகர்', 'விவேக சுதாகர்' என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார் சுதாகரன். ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்கு களைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை. இப்போதும் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தனியாகவே பெங்களூருக்கு சென்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+