தமிழகம் முழுவதும் ரகசிய உலா... வாக்காளர்களை கவர் செய்யும் ஜெ.யின் ‘தேர்தல் தளபதிகள்’ யார் தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ரகசிய தேர்தல் தளபதிகளாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் ரகசியமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலையொட்டி எப்படியும் வெற்றிக் கனியைப் பறித்து, முதல்வர் நாற்காலியைத் தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கட்சித் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று, மக்களோடு மக்களாக கலந்து பேசி சிலர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இவர்களில் இருந்து சற்று வேறுபட்டு ரகசியமாக வாக்குச் சேகரிப்பு பணியில் 5 பேரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவர்களை தமிழ்நாடு முழுவதும் தேர்தல் தளபதிகளாக களமிறக்கியுள்ளதாம் அதிமுக.
இது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ஜெயலலிதா நியமித்துள்ள அந்த ரகசிய தேர்தல் தளபதி குழுவில் விஜிலா சந்தியானந்த் எம்.பி., அன்வர் ராஜா எம்.பி., மருதராஜ் எம்.பி., வேணுகோபால் எம்.பி மற்றும் தூத்துக்குடி சரவணபெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனராம்.
இவர்களில் கிறிஸ்தவ சமய தலைவர்களை சந்தித்து பேச விஜிலாவும், முஸ்லிம் சமூக பெரியவர்களை சந்தித்து பேச அன்வர்ராஜாவும், முத்தரையர் சமூக பெரியவர்களை சந்தித்து பேச மருதராஜும், யாதவர் சமுதாய பெரியவர்களை சந்தித்து பேச வேணுகோபாலும், பிள்ளைமார் சமுதாய தலைவர்களை சந்தித்து பேச தூத்துக்குடி சரவண பெருமாளும் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
இவர்களின் பணி மாவட்டம்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சமூக பெரியோர்களைச் சந்தித்து, அப்பகுதி வாக்குகளை அதிமுகவிற்கே மொத்தமாக கவர் செய்வது தான். ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக இந்த வேலையைச் செய்யும்படி கட்சித் தலைமை உத்தரவாம்.
இவர்களும் தங்களது கடமையை கண்ணாக செய்து வருகிறார்களாம். இந்த வியூகம் மற்ற கட்சியினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதால், படு ரகசியமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்களாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications