ஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்
ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்டு அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திண்டுக்கல்: ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை டிவியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மேலும், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இந்தத் செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்த பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான இவர், குட்டுப்பட்டி அதிமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்ததில் இருந்து கவலையுடன் காணப்பட்ட இவர், இன்று ஜெயலலிதாவிடன் உடல் கவலைக்கிடம் என்ற செய்தியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரால் ஜெயலலிதா குறித்த செய்தியை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருக்கு நாச்சம்மாள் என்ற மனைவி உள்ளார். டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெரியசாமி உயிரிழந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications