சேரில் உட்கார்ந்தார் ஜெ.... இயற்கையாக சுவாசித்தார்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், இயல்பாக சுவாசித்ததாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், இயல்பாக சுவாசித்ததாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 50வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விரைவில் அவர் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், அந்த நேரத்தில் 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல், இயல்பாகவே அவர் சுவாசித்ததாகவும் கூறப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications