குழந்தைகளுக்கு "குமாரசாமி" பெயர் வைங்கப்பா.. கோவை சந்திரனின் குபீர் ஐடியா!
சென்னை: கால்குலேட்டர் தப்பு பண்ணுச்சா.. இல்லை கணக்குப் போட்ட குமாரசாமி தப்பு செய்தாரா என்பதே இன்னும் சரியாக தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கண்டமும் இன்னும் கூட முழுமையாக விலகவில்லை.. இந்த லட்சணத்தில், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு குமாரசாமி என்று பெயர் வைக்க ஆரம்பித்துள்ளனராம் அதிமுகவினர்.
குமாரசாமிதான் இப்போதைக்கு அதிமுகவினரின் குலசாமி... கும்பிடும் சாமி!.. குன்ஹா தீர்ப்பால் சிறைக்குப் போன ஜெயலலிதாவை, குமாரசாமியின் தீர்ப்பு வெளியில் கொண்டு வந்து விட்டதை அதிமுகவினர் இன்னும் கூட கொண்டாடி வருகின்றனர். சாமி கும்பிடப் போகும்போது குமாரசாமி பெயருக்கும் சேர்த்து வேண்டிக் கொள்கிறார்களாம்.

குமாரசாமிக்கு கட் அவுட் வைக்காத குறையாக அவரை கொண்டாடி வருகிறார்கள் அதிமுகவினர். இந்த நிலையில் தற்போது அதற்கும் மேல போக ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களது குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு குமாரசாமியின் பெயரை வைக்க ஆரம்பித்துள்ளனராம்.
கோவை மாநகராட்சியின் 84வது வார்டு கவுன்சிலர் சந்திரன் இந்த வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவர் தனது வார்டுக்குட்பட்ட மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். அங்கு அனுமதிக்கப்பட்டு பிரசவத்திற்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளை அணுகி, அவர்களில் அதிமுகவினர் யாராவது இருந்தால் அவர்களிடம் ஆண் குழந்தை பிறந்தால் மறக்காமல் குமாரசாமி என்று பெயர் வையுங்கள் என்று கேட்டுக் கொண்டு வருகிறாராம்.
பெண் குழந்தை பிறந்தால் "அம்மா" பெயரை மறக்காம வச்சுடுங்க என்றும் அவர் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறாராம். இந்தப் பெயர்களை வைத்தால் பொன், பொருள் போன்ற ஆதாயம் கிடைக்குமோ என்ற நம்பிக்கையில், பல பெண்கள் இந்த ஐடியாவுக்கு ஓகே சொல்லி வருகிறார்களாம்.
இதுகுறித்து சந்திரன் கூறுகையில், குமாரசாமிதான் எங்கள் அம்மாவை விடுவித்தவர். அவர் மீது தனிப் பாசமே பிறந்து விட்டது. அவருக்கு எங்களால் ஆன நன்றிக் கடனாக இதைச் செய்கிறோம். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்றார் சந்திரன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications