பிரதமர் பதவி போட்டியில் ஜெயலலிதா.. மலைச்சாமி நீக்கம் சொல்வது என்ன?
சென்னை: பிரதமர் பதவிக்கான போட்டியில் இன்னமும் தாம் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கருதுவதுதான் அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி மலைச்சாமி நீக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தலில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்ட ஊடகங்கள் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்ததாக அதிமுகதான் என்று கூறின.

3வது பெரிய கட்சி அதிமுக
இந்த நிலையில் நேற்று என்.டி.டிவி. தொலைக்காட்சி வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவில் தமிழகத்தில் அதிமுக 32 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 3 வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸை விட கூடுதல் இடங்களில் மாநில கட்சிகள்
அத்துடன் காங்கிரஸை விட அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மொத்தமாக கூடுதல் இடங்களைப் பெறும் என்பதுதான் எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு?
இதனால் 1989-90களில் மதச்சார்பற்ற அரசு அமைய ஆதரவளிப்போம் என்று மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவளித்தது போலவும் அண்மையில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்ததைப் போலவும் காங்கிரஸ் முடிவெடுக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.

பிரதமர் பதவி?
அப்படி காங்கிரஸ் முடிவெடுக்கும் நிலையில் தேசிய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் தமக்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

மமதா ஆதரவு
ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

துணை பிரதமர் பதவி
ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் கூடுதல் இடங்களைப் பெற்று பிரதமர் பதவியை எடுத்துக் கொண்டாலும் நிச்சயம் துணை பிரதமர் பதவியாவது கிடைக்கும் என்பதும் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.

முக்கிய இலாகாக்கள்
அத்துடன் மத்திய அரசில் வலிமையான பாதுகாப்பு, வெளியுறவு, நிதி, ரயில்வே போன்ற துறைகளைப் பெற்றால் அது எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும் பெரிய அளவில் கை கொடுக்கும் என்பதும் ஜெயலலிதாவின் திட்டமாக சொல்லப்படுகிறது.

யூகத்துக்கு இடம்கொடுக்காத ஜெ. பேட்டி
அதனாலேயேதான் ஜெயலலிதா எந்த ஒரு யூகத்துக்கும் இடம்கொடுக்காமல் மே 16-ந் தேதி கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

உணராத மலைச்சாமியின் பேட்டி
ஆனால் இதை உணராமலேயே முன்னதாகவே முந்திக் கொண்ட மலைச்சாமி, பாஜக கூட்டணியை அதிமுக ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

மோடி அலை
அந்த பேட்டியில் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மோடியை ரொம்பவும் புகழ்ந்திருந்தார் மலைச்சாமி. நாட்டில் மோடி அலை வீசுவதாகவும் கூறியிருந்தார்.

ஜெ.வின் நண்பர்
அத்துடன் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் மோடி என்றும் கூறியிருந்தார் மலைச்சாமி.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெ.
இப்படி தமக்கே பிரதமர் பதவிக்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் நாம் ஏன் பாஜகவை ஆதரிக்க வேண்டும்? அப்படி ஏன் மலைச்சாமி சொல்ல வேண்டும்? என்ற கோபத்தில்தான் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

காங்கிரஸ், இடதுகள் மகிழ்ச்சி
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் மோடி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள் முகாம்கள் ஜெயாவின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
-
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications