Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பல்லோவில் 37வது நாளாக ஜெ.,: மருத்துவமனை வாசலில் ரத்ததானம்... அன்னதானம்... கணபதி பூஜை

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டி மருத்துவமனை வாசலில் ரத்ததானம், அன்னதானம் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 37வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை முன்பு, நீலகிரி மாவட்ட படுகர் இனமக்கள் சார்பில், படுகர் இன பாரம்பரிய பாடல்களைப்பாடியும், கணபதி கலச பூஜை நடத்தியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஜெயலலிதா நலம்பெற்று வீடு திரும்பி நீண்ட ஆயுளுடன் வாழ அதிமுகவினர் சார்பில் அன்னதானமும், ரத்ததானமும் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும், தொழுகைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான அதிமுகவினரும் பொதுமக்களும், ஜெயலலிதா நலம்பெற சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், காரப்பாக்கம் ஸ்ரீபிரத்யங்கரா தேவி கோயிலில் தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்பல்லோ கணபதி

அப்பல்லோ கணபதி

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அப்பல்லோ வாசலில் உள்ள கணபதிக்கு தினசரியும் பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் களை கட்டி வருகின்றன. மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி என ஏதாவது ஒரு அணியினர் தினசரி பூஜை செய்து ஜெயலலிதா நலம் பெற வேண்டிக்கொள்கின்றனர்.

கணபதி கலச பூஜை

கணபதி கலச பூஜை

நீலகிரி மாவட்ட படுகர் இனமக்கள் சார்பில், படுகர் இன பாரம்பரிய பாடல்களைப்பாடியும், கணபதி கலச பூஜை நடத்தியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். வெள்ளை நிற பாரம்பரிய உடை அணிந்து படுகர் இன மக்கள் நடத்திய பிரார்த்தனையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

திருட்டி கழித்த தொண்டர்கள்

திருட்டி கழித்த தொண்டர்கள்

ஜெயலலிதாவிற்கு பட்டுள்ள திருஷ்டிகள் அனைத்தும் கழிய வேண்டி மருத்துவமனை வாசலில் பூசணிக்காயில் சூடம் ஏற்றி சுற்றி உடைத்தனர். கணபதிக்கு 108 தேங்காய்களையும் உடைத்து வேண்டிக்கொண்டனர்.

ரத்ததானம்

ரத்ததானம்

மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ் அமைத்து அதில் ஏராளமான அதிமுகவினர் ரத்ததானம் அளித்தனர். உலக வரலாற்றிலேயே முதன்முறையாக மருத்துவமனை வாசலில் அதிமுகவினர் ரத்ததானம் வழங்கியுள்ளனர்.

ஆங்காங்கே அன்னதானம்

ஆங்காங்கே அன்னதானம்

ஜெயலலிதாவை காண வரும் தொண்டர்கள் நாள் கணக்கில் மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். தினசரியும் கோவில்களில் பூஜை நடத்தி அங்கேயே அன்னதானமும் வழங்கப்படுகிறது. காய்கறி பிரியாணி, தக்காளி சாதம், வெண் பொங்கல் என தினசரி அதிமுகவினர் வழங்கும் அன்னதானம், அங்கிருக்கும் அதிமுகவினரின் பசியாற்றுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+