ஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன்? மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்
அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவங்களில் ஒன்றில் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார்; மற்றொன்றில் ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைத்திருப்பதால் அந்த மனுக்கள் செல்லாது என்பது மூத்த வழக்கறிஞர் துரைசாமி கருத்து.
சென்னை: முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைத்ததால் அந்த வேட்புமனுக்கள் செல்லாது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதில் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில் படிவம்- பியில் முதல்வர் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை பதிந்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் என விளக்கம் தந்திருந்தது. இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இல்லை என கூறப்பட்டது.
ஆனால் மூத்த வழக்கறிஞர் துரைசாமியோ, வேட்பு மனு படிவம் ஏ-ல் போட்டுள்ள கையெழுத்தும் படிவம்-பியில் போட்டுள்ள கையெழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
தற்போது பி படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரின் வேட்புமனுக்களே செல்லாது; அத்துடன் ஜெயலலிதாவின் பெயரை கையால் எழுதாமல் டைப் செய்திருப்பதும் கூட சட்டப்படி தவறானதே என்கிறார்.
விடாது கருப்பு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications