ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம்... வைரலாகும் பத்திரிக்கை
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சி பத்திரிக்கை இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் பங்களாவின் கிரகப்பிரவேச பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போயஸ்கார்டன் என்றாலே நினைவுக்கு வருபவர் ஜெயலலிதாதான். கடந்த 44 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா வீட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி வேதாநிலையம் சென்று விருந்து சாப்பிட்டார்.

ஜெயலலிதாவின் அம்மா பெயர்
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. தனது தாயாரின் நினைவாகவே வேதாநிலையம் என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.

சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சி அழைப்பிதல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தெய்வம்
கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக்குமாறு உள்ள இந்த அழைப்பிதழின் முகப்பில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பிடித்த தெய்வம் விநாயகர்.

அடையாளம் சொல்லும் அழைப்பிதழ்
கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

போயஸ்கார்டன் வீடு
கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அதிமுகவினரின் கோவிலாக வணங்கப்படுகிறது. சமீபத்தில் வருமானவரி சோதனைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications